ரிங் டோன்

December 21, 2007

FATWA
Saudi council of Muftis have given an unanimous Fatwa that ring tones on QURAN AAYAS are haraam because the AAYAT are not complete when we pick the phone & meanings of AAYA/S changes when they are not complete. QURAN E PAK is for Hidayat not for ring tones.


அறிஞர்களின் பார்வையில்

December 7, 2007

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்
– நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.
– ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.

இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது.
– சிஎன்என், டிசம்பர் 15, 1995.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவந்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.
– ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.

இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள்.

– சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

– டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.

மனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.-

- ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.

வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.

இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி :

இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.
– என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.

இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.
– லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.
– ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.

அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.

போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
– பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது.
– அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.

கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.
– மகாத்மா காந்தி,  ’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
– வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.
– தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840.

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் நேரு -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.

- எஸ். எச். லீடர் -
                                                                                                                                                 
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -
 
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
- டாக்டர் ஜான்சன் -
 
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
- நெப்போலியன் -

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -
 
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர் -
                                                                                                                                      
 ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
- காந்திஜி -
 
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
- தாமஸ் கார்லைல் -
 
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -
 
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
- கிப்பன்
__________________________________________________________
ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:


குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது’ என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.
-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167

சுவாமி விவேகானந்தர்
மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன். நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் – அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.

Letters Of Swamy Vivekananda page 463

சர் சி.பி.ராமசாமி அய்யர்
இஸ்லாம் என்றால் என்ன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் – அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.
Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.
Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

லாமார்டின்
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்துதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் அவர்கள்.


கவிக்குயிலின் பார்வையில்

December 7, 2007

doll.jpg 

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
                                                                                                                                                             - கவிக்குயில் சரோஜினி நாயுடு -


கலைஞர் கண்ட இஸ்லாம்

December 7, 2007
kalainggar-new2
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.       
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா? என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி, இன்றைய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம் பரவியிருக்கிறது என்றால் ‘ஐயோ’ இதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையே, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறார்’ என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால் அந்தக் கொள்கைகள் இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது.
நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கு இடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.
                                                                                                                                                                                                   அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம். அதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம். நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன். அந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.
நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
                                                                                                                                                                                   அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.
- கலைஞர் கருணாநிதி -

தமிழகத்தில் முஸ்லீம்கள்

December 7, 2007

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.

நன்றி : தினமணி.


ஜம் ஜம் – அதிசயம்

December 7, 2007
image001image002image003
ஆராய்ச்சி: தாரீக் ஹுஸைன்            மொழியாக்கம் : முயீன்                                        

 ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசய நீராகிய ஜம்ஜம்மின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ‘ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல” என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.

கஃபத்துல்லா, தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் - இதனன விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார்.அமைச்சரவை ஜித்தாவில் உள்ள மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்”இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் - நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக  (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு… கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு… இபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!

நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன். அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நின்றபடியே சென்றார் – காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதிக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து  நீர் வரும் வழியைக் காணலாமே என்று! ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான” பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் ‘அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.” பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலைமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.

நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளதுமற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.

ஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (lab) இந்த நீர் குடிப்பதற்கு உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போதுஅவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.

இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜம் நீரை ஆராய - ஆராய மேலும் பல அதிசய தன்மைகள் வெளிவந்து - நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.
 

சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்.
 

 

 

  • இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
    என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாகஅது உருவான காலத்திலிருந்து உள்ளது.

  • அதன் ‘குடிக்கத்தக்க தன்மை” ஒவ்வொரு ஆண்டும் உம்ராஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal)..

  • பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும்மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.

  • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.

  • The Well of Zamzam (or the Zamzam Well, or just Zamzam; Arabic: ) is a well located within the Masjid al Haram in Mecca, 20 metres east of the Kaaba,[1] the holiest place in Islam. According to Islamic tradition it was a miraculously- generated source of water from angel Jibril (Gabriel), which began thousands of years ago when Ibraham’s infant son was thirsty. Millions of pilgrims visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order to drink its water. By Saudi law, the water cannot be sold outside of the kingdom, but because of strong demand there is a thriving market in fake Zamzam water in other countries.

  • Zam Zam is 18X14 ft & 18 meter deep water well.
    It started 4000 yrs ago.
    Never dried since then.
    Never changed the taste, no Algea or plant growth in the pond, thus no disease caused.

  • It was tested by European Laboratories & declared fit for drinking.

  • This small pond provides water to millions of people through heavy motors pulling 8000 lit: per second and after 24 hours in only 11 mins completes its level. Thus its water level never decreases

  • Subhanallah !!!


பூக்கள்

December 2, 2007

இறைவன்
பிரசுரிக்கும்
இணையில்லா
பத்திரிக்கை
இந்த பூக்கள்.

வெல்வெட்
இதழ்கள்;
வண்ண வண்ண
எழுத்துக்கள்.

அச்சுப்பிழை
இலக்கணப்பிழை
இல்லாத
அழகிய படைப்பு.

காலை பதிப்புமுண்டு
மாலை பதிப்புமுண்டு

விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்ட
பிரதிகள் இவைகள்

எல்லா மொழியினரும்
புரிந்துக் கொள்ளும்
எளிய மொழிநடை

பரமனின்
பத்திரிகையை
பாமரனும் படிக்கையிலே
பரமசுகம்.

சமயச் சார்பற்ற
சஞ்சிகை இது.

தினசரி
வாராந்தரி
மாதாந்தரி
ஆண்டு மலர்

ஏன் ?
அவனது பிரசுரத்தில்
மாமாங்கத்திற்கு
ஒருமுறை
வெளியாகும்
குறிஞ்சி மலரும் உண்டு

ஆபாசமே இல்லாத
ஒரே மஞ்சள் பத்திரிக்கை
இதுவாகத்தானிருக்கும்

மனிதனின் பத்திரிக்கை
படித்தால்தான்
ஆனந்தம்

இறைவனின்
பத்திரிக்கையை
பார்த்தாலே
பரவசம்

சமயக் குறிப்பு
மருத்துவக் குறிப்பு
வீட்டுக் குறிப்பு
அனைத்தும் உண்டு

பொடி வைத்து எழுதிய
புதுக்கவிதையும் உண்டு
ஆம் ..
மகரந்தப் பொடி

வசீகர நடையில்
வசமிழந்துப்போன
வாசக வண்டினங்கள்

வரிவரியாய்
மனனம் செய்வது
ரீங்காரமாய் காதில் விழும்

தாவரவியல்
மாணவர்களின்
குறிப்புதவி ஏடு

இணையத்து
மின்னிதழோ
இந்த சூரிய காந்தி ?
கதிரவனைக் கண்டதும்
பக்கங்கள்
தானாகவே
திறக்கின்றனவே ?

ஊட்டியில்
ஆண்டுதோறும்
திறந்திருக்கும்
நூலகமொன்றில்
நான் படித்த வாசகம்
“பத்திரிக்கைகளை
புரட்டாதீர்கள்”

     அப்துல் கையூம்
     நன்றி : திண்ணை (29.11.07)


முஸல்லா

December 2, 2007

முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.

யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?

நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !

நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !

உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !

பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !

கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !

உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !

உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை

அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.

கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?

நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்

தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல

நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !

உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !

அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?

வருவாயா?
வருவாய்.

       – அப்துல் கையூம்