பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
டாக்டர் அம்பேத்கார்
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
டாக்டர் அம்பேத்கார்
(இதனை இணயத்தில் பதிவுச் செய்த தம்பி சுலைமானுக்கு நன்றி உரித்தாகுக)
இஸ்லாம் கூறுகின்ற ஒரிறைக் கொள்கையும், மாந்தரினம் ஒன்றே என்ற கொள்கையும், மனிதவாழ்வு இம்மை-மறுமை தொடர்புடையது என்னும் கொள்கையும், தமிழகத்திற்கு இஸ்லாம் அறிமுகப்படுத்திய கொள்கைகள் என்பதைவிட, இஸ்லாம் மூலம் , தமிழகத்தில் நினைவுபடுத்தப்பட்ட கொள்கைகள் ஆகும்; என்பதே, வரலாறு காட்டும் உண்மையாகும்!
‘ஒருவனே தேவன், ஒன்றே குலம்’ மற்றும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’(கிளையார்) எனும் கொள்கைகள், தொன்றுதொட்டே தமிழகத்தில் நிலவி வந்தவையாகும்! ஆகவே இஸ்லாம் மூலம் வந்துள்ள கொள்கைகள், இஸ்லாம் தந்துள்ள கொள்கைகள் என்பதை விட, தமிழகத்தில் அவை பண்டைய காலம் தொட்டு இருந்துள்ள கொள்கைகள் என்பது தெளிவாகிறது.
திரு கி.ஆ.பெ. அவர்கள் குறிப்பிடுவது. ‘தமிழகத்தில் ஓரிறைக் கொள்கை, மாந்தரினம் ஒரே குடும்பம் எனும் கொள்கை. உலக மக்கள் யாவரும் ஒரே கிளையார் எனும் கொள்கை சைவநெறிக் கொள்கைகளானக போற்றப்பட்டு வந்துள்ளன!’
இதே கொள்கைகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரேபியாவில், நிலை நிறுத்தியதோடு, வையெமெங்கும் அக்கொள்கைகளை பரவ்ச் செய்துள்ளார்கள். தமிழகத்தில் வரையறுத்துக் கூறமுடியாத வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்து நிலவி வந்த கொள்கைகள், இஸ்லாம் மூலம் உலகம் முழுவதிலும் பரவியுள்ளன. தமிழகத்தில் சைவநெறியாக இருந்தது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் இஸ்லாமிய நெறியாக் திகழ்கிறது என்று முத்தமிழ்க் காவலர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் போற்றும் கொள்கைகள் அரபகத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளன; என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இக்கொள்கைகள் இஸ்லாம் என்ற பெயரில் வருவதற்கு முன்னரே, அவை தமிழகத்தில் இருந்தன என்பதற்கும் சான்றுகள் உள்ளன! இஸ்லாம் காட்டும் ஓரிறைக் கொள்கையை, ஏகத்துவத் தத்துவம் என்பர். இதனை அல்லாஷ் எனும், இறைவனின் திருப்பெயர் மூலம், இஸ்லாம் தெளிவுப்படுத்தி இருக்கிறது.
அல்லாஹ் எனும் அரபிச்சொல், இன்று உலகெங்கும் தெரிந்திருக்கிறது. நபிகள்நாயகம் (ஸல்) பிறப்பதற்கு முன்னால், அரபிமக்கள் மத்தியில், ‘அல்லாஹ்’ எனும் சொல், வழக்கில் இருந்திருக்கிறது. நபிகள் (ஸ்ல) அவர்களின் தந்தையார் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார் -என்பதாகும்) மக்காவில் உள்ள கஃபாவில் 200விக்கிரகங்கள் இருந்தன. ஆனால், அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு ஏக இறைவன் உண்டு; என்றும், அவனே ‘அல்லாஷஹ்’ என்றும், அரபுமக்கள் தெரிவித்திருந்தனர். இறைவன் ஒருவனே எனபதும், அவனுடைய பெயர் அல்லாஹ் என்பதும், இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னரே அரபிகள் அறிந்திருந்த உண்மைகள் ஆகும்!
திருக்குர்-ஆன் திருநபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது; கி.பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில். திருக்குர்-ஆன் அல்லாஹ் அருளிய வேதம்! அதன்பின்னரே அல்லாஹ் மக்களால் ஏற்றுப் போற்றும், இறைவனின் திருப்பெயரானது. ஆனால், அராபியர்களுக்கு இச்சொல் அதற்கு முன்னரே தெரிந்ததாக இருக்கிறதே? அராபியர்களுக்கு இச்சொல்லைக் கற்பித்தது யார்? அவர்களுக்கு அச்சொல் எங்கிருந்து வந்தது?
ஓரிறைத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது. அப்படியெனில், தமிழகத்தில் ‘அல்லாஹ்’எனும் சொல் வழக்கில் இருந்ததா?
12-ம், நூற்றாண்டு வைணவ இலக்கியத்தில், “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலுமாகான்” எனக் குறிப்பிடப்பட்டதாக கா.சு. பிள்ளை தமிழ்ச்சமயம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சைவ மத கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானுக்கு “அல்லாமாத்தேவர்” எனப் பெயருண்டு என பேராசிரியர் பி.கே. வேலாயுதம் கருத்துத் தெரிவிக்கிறார். அதனால்தான் இறைவனை, ஆணல்ல, பெண்ணல்ல, அலியுமல்ல என்று தேவாரம் குறிக்கிறது என்கின்றனர். வீர சைவர்கள் தங்களின் கடவுளை “அல்லாமா” என்னும் இறைவனுக்கு உருவமில்லை என தெலுங்கு ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது; என தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள இஸ்லாமும்-தமிழகமும் எனும் நூலில் காணப்படுகிறது.
பண்டித சுந்தர்லாலின் THE GEETA AND THE QURAN எனும் நூலில் (பக்கம் 5) எல்லம் வல்ல இறைவனை திருக் குர்-ஆன் அல்லாஹ் என நாமமிட்டு அழைக்கிறது. ரிக் வேதத்தில் ஈஸ்வரன் “இலா” என் அழைக்கபடுகின்றான். இலா என்னும் சொல்லின் மூலம் “எல்” ஆகும். “எல்” என்றால், புகழுக்குரியது, வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.
ரிக் வேதத்திலுள்ள ஒரு முழு சுலோகம் “இலா” எனும் இறைவனிடம் இறைஞ்சுவதாக உள்ளது. ஏறத்தாழ 6000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சுமேரிய மொழியில் இறைவனுக்கு “எல்” எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமேரிய நகரான பாபிலோன் உண்மையில் “பாப்எல்” என்றே அழைக்கப்பட்டது. “பாப்எல்” என்றால் “எல்” லாகிய ‘இறைவனின் வாயில்’ என்றே பொருளாகும்.
யூதர்களின் வேதமாகிய “தெளராத்” என்ற நூலிலும், பார்ஸிகளின் வேதமாகிய “ஜென்ட் அவைஸ்தா” என்ற நூலிலும், “எல்” எனும் சொல் அநேக இடங்களில் வருகிறது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டப்போது, “எல்லி எல்லி” என்றனர்; அதாவது என் இறைவனே, என் இறைவனே என்றனர். (இஸ்லாமிய மரபில் ஏசுநாதர் (ஈஸா நபி ஸல்.) சிலுவையில் அறையப்படவில்லை; என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.)
“எல்” என்பது பொதுவாக “இலைஹா, இலாஷ்” என்றே ஹிப்ரு, சிரியாக், சால்தியா மொழிகளில் வருகிறது. இதிலிருந்து ஓர் உண்மைத் தெளிவாகிறது. ரிக் வேதக் காலத்திலிருந்து , தற்காலம் வரை, அல்லாஹ் எனும் சொல் ஏதோ ஒரு வடிவத்தில், இறைவனைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது; என்பது புலனாகிறது என சுந்தர்லால் கூறுகிறார்.
ரிக் வேதத்திற்கு முந்தியது தமிழ்மொழி என்பது தமிழரறிஞர்களும்-மொழி ஆய்வாளர்களும், கண்டுள்ள உண்மையாகும். மிகப் பழமையான தமிழ்மொழியில், “எல்” எனும் சொல்லும் அதற்கு இறைவன் எனும் பொருளும் இருந்துள்ளது எனக் கண்டறியப்பட்டால், தமிழகத்திலும் அல்லாஹ்தான் ஆதியில் இறைவனாகப் போற்றப்பட்டுள்ளது; எனத் தெரியலாம்!
வரலாற்றிஞர் திரு ந.சி. கந்தையாப்பிள்ளை “ஈழம்” எனும் பெயர் “எல்” என்பதன் திரிபு என்கிறார். (பழந்தமிழர். பக்கம் 18-19) தெனபுலோலியூர் மு.கணபதி பிள்ளை அவர்களும், இக்கருத்தை செந்தமிழ்ச் சேர்ந்த, பன்னிரு நிலத்தில் ஒன்றாகிய ஒளிநாடுதான் “எல்லம்” எனலாம். “எல்லே இலக்கம்” என்றது தொல்காப்பியம். “எல் ஒளிஇலக்கம்” என்ற பொருளைத் தருவதே இலங்கையாகும்!
இலக்கம் என்ற சொல் “லகி, லக்திப” என நின்று சிங்கள மொழியில் இலங்கையைக் குறிப்பதாகும். எல்நாடு (ஒளிநாடு) எல்லம் எழு (ஏழ்) நாடு-ஏழம், ஈழம் எனவாயிற்று என வலியுறுத்தினார். (வால்மீகியார் தமிழரே. பக்கம் 64-65) கணபதிப் பிள்ளை மேலும் குறிப்படுவது; “எல்” நாட்டின் “எல்” மலையின் மேவிய கடவுளே எல்லப்பன் எனப்பட்டான். இந்த எல்லப்பனே செல்லப்பன் ஆயினான். செல்லையனும் அப்படியே; எல்லப்ப நாவலர், எல்லப்ப நயினார், எல்லப்ப பூபதி என்றும் வழங்கப்பெறுவார்.
மதுரையில் நடைப்பெற்ற 5வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், உரை நிகழ்த்திய முனைவர் ஜே.டி. சேவியர் கூறுவது, ஆதி திராவிடத்தில் எழுத்துக் கடவுள் என்ற கருத்தைத் தரும் பட்டங்களாகிய “எலி ஊசா எல் ஏலி அலி” என்பவற்றைச் செமித்திய இனத்தவர்கள், தமது மொழியில் உள்வாங்கி, தமது தெய்வங்களை “எல் எலி அலி” போன்ற பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். விவிலிய தீர்க்கதரிசிகளின் பெயர்களான, “எலிசா, எலிஜா, எலிசபெத்” என்பன திராவிட எழுத்துக் கடவுளின், பட்டங்களின், திரிபுகளாகக் காணப்படுகின்றன. (இந்து சமயத்தின் மொழி. பக்கம் 22-23)
செமித்திய இனம் என்பதும் அரேபியரைக் குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்து “எல்” எனும் சொல் இறைவனைக் குறிக்கிறது; என்பதும் அச்சொல் ஆதி தமிழகத்தில் மக்கள் மத்தியில் நிலவியது என்பதும், தமிழகத்திலிருந்து அச்சொல் வடபுலத்திற்கும், செமித்திய இனமாகிய அரபுகள் வாழும், மத்தியத் தரைக்கடல் பிரதேசங்களுக்கும், சென்றுள்ளது என்பதும், அச்சொல்லே அல்லாஹ் எனும் சொல்லின் மூலம் என்பதும், ‘அல்லா’ என்பது அரபகத்தில் அல்லாஹ் எனும் வழக்காக ஆகியுள்ளது என்பதும், அந்த அல்லாஹ்தான், இஸ்லாம் மூலம் தமிழகத்திற்கு மீண்டும் திரும்ப வந்துள்ளது; என்பதும் நிருபணமாகிறது.
“எல்” எனும் சொல்லுக்கு ஒளிக்கடவுள் என்னும் பொருள் விவரிக்கப்படுவதைக் கண்டோம்.
தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…
கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே
இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம். பக்கம்
இதில் எதிலும் எனது கருத்துக்கள் இல்லை. இவை எல்லாம் ஆராய்ச்சி வல்லுனர்கள் எழுதியவையாகும். இதன் தொடர்பாக உங்களின் கருத்துக்களை-அபிப்பிராயங்களை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்
சுலைமான்.
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.
- திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

பரந்து கிடக்கும் தமிழிலக்கியங்களில் பெரும்பாலும் கம்பராமாயணம் மகாபாரதம், கந்தபுராணம், பெரிய புராணம் ஆகியவையே சொற்பொழிவுகளாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மற்ற சிறந்த இலக்கியங்களும் இந்நிலை எய்த வேண்டும் என்பது என் விழைவு.
ஆதலின் என் சென்னை வாழ்க்கையின்போது அங்கே பல்வேறு அமைப்புகளில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சிற்றிலக்கியங்கள், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள், இராவண காவியம் ஆகியவற்றைத் தொடர் சொற்பொழிவுகளாக ஆற்றியுள்ளேன். ஒவ்வொரு தொடரும் ஏறத்தாழ இருபது பொழிவுகளில் அமைந்தது.
என் பொழிவுகளைக் கேட்க என் அருமை நண்பர் மணவை முஸ்தபா வருவது வழக்கம். அவர், இந்த இலக்கியங்களைப் போலவே ஏதேனுமோர் இசுலாமிய இலக்கியத்தை நான் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டுமென விரும்பினார். இஸ்லாமிய இலக்கியங்களில் பயின்று வரும் அரபு, பார்சிச் சொற்கள், சமய நெறிமுறைகள் ஆகியவற்றில் சிறிதும் பயிற்சியற்ற நான் இப் பணியைச் செய்ய முடியுமா என ஐயுற்றேன். நண்பர் வலியுறுத்தவே, நபிகள் நாயகத்தின் வரலாறு கூறுவதும் தமிழ்க் காப்பியங்களில் சிறப்பிடம் பெற்றிருப்பதுமான சீறாப்புராணத்தைப் பேச ஒப்பினேன்.
மணவை முஸ்தபாவின், “மீரா பவுன்டேசன்’ கூட்ட ஏற்பாட்டைச் செய்தது. சென்னை மறைமலையடிகள் நூலகத்தின் மாடியில் உள்ள, வள்ளலார் மணி மண்டபத்தில் கூட்டங்கள் ஏற்பாடாயிற்று. மறைமலையடிகளார் சீரிய சைவர்; வள்ளலாரோ சமரச சுத்த சன்மார்க்கம் கண்டவர்; அங்கு பேசவிருக்கும் இலக்கியமோ நபிகள் நாயகம் வரலாறு பற்றியது. இந் நல்லிணக்கமே என் மனதுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
எடுத்த பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதால் கவி கா.மு. ஷெரீப், முஸ்லிம் முரசு இதழின் முன்னாள் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஹஸன் ஆகியோர்களிடம் சென்று பல்வேறு விளக்கங்களைப் பெற்றேன். அவ்விருவரும் ஒரு மாணவனுக்குப் பாடம் நடத்துவதுபோல எனக்கு விளக்கம் தந்தனர். மேலும் நான் படிக்க வேண்டிய பல பயனுள்ள நூல்களையும் கொடுத்து உதவினர். தமிழில் தன் முன்னேற்ற நூல்களை முதன்முதலாக எமுதிய பெருமைமிகு அப்துற் றஹீமைக் கண்டேன். அவர் ஓயாத எமுத்துப் பணியை மேற்கொண்டவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனியொருவராகச் செய்தவர். அவர் எமுதிய, “இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ மூன்று தொகுதிகளையும் கொடுத்து, “”உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க இவை உதவும்” என்று ஊக்கமளித்தார்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாக, கூட்டங்கள் தொடர்ந்து ஓராண்டு நடந்தன. ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத்திற்குமிடையே இருந்த 15 நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரமாவது, அடுத்த கூட்டத்திற்குரிய பொருள்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் படித்து வந்தேன்.
முதல் நாள் கூட்டம்; முந்நூறு பேருக்குமேல் குமுமியிருந்தனர். பாதியளவு முஸ்லிம்கள்; ஏதாவது பிழை நேர்ந்துவிடுமோ என்ற அச்சம். குழந்தை’ சோறு என்பதைச் “”சோச்சி” என்று சொன்னாலும் அதைத் தவறாகக் கொள்ளாமல் குழந்தையின் மழலையாக எண்ணி மகிழ்வதுபோல் நான் ஏதாவது தவறாக உச்சரித்தால் “அது குழந்தைப் பேச்சு” எனக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு தொடங்கினேன். கூட்ட முடிவில் அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர். அவ்வப்போது இஸ்லாமிய நண்பர்கள் என்னைக் கண்டு என் பொழிவில் இருந்த குறை நிறைகளைச் சுட்டிக் காட்டியதோடு எவ்வெப்பகுதியை நான் எவ்வாறு கூற வேண்டும் என்றும் ஆற்றுப்படுத்தி ஊக்கமூட்டினர்.
நானும் முடிந்த அளவு முமுமையாக அறிந்த பிறகே எதையும் கூறினேன். ‘தொழுகை வந்த வரலாற்றுப் படலம்’ பற்றிப் பேச வேண்டியதற்கு முன்பு பள்ளி வாசலுக்குச் சென்று, அங்கிருந்த இமாமின் இசைவுடன் தொழுகையை முமுமையாகக் கவனித்தும் அது பற்றிய அனைத்து விளக்கங்களையும் கேட்டறிந்த பிறகே சொற்பொழிவாற்றினேன். அதனால் இஸ்லாமியர்கள் தொழுகையின் உட்பொருளை அறிந்து இன்புற்றனர்; இஸ்லாமியர் அல்லாதோர் தொழுகையில் அடங்கியுள்ள செய்திகளை முமுமையாக அறிந்தனர்.
முன்னர்த் தோன்றியுள்ள காப்பியங்களோடு சீறாவை ஒப்பிட்டுப் பேசியபோது மக்கள் தனி மகிழ்ச்சி கொண்டனர். சீவக சிந்தாமணி தொடங்கி காப்பியங்களில் அவையடக்கம் காணப்படுகிறது. கம்பர் தான் இராமாயணத்தைப் பாடுவது, “பாற்கடலைப் பூனை நக்கிக் குடிப்பதற்கு ஒப்பாகும்” என்பார். இம் முறையில் உமறுவும் நற்றமிழ்ப் புலவர்முன் தான் காவியம் படைப்பது என்பது, “கடல்களும் மலைகளும் நிலைகுலையும்படியாக வீசுகின்ற சூறைக் காற்றின்முன் பசியால் வாடி இளைத்து நொந்த ஒரு சிற்றெறும்பு பெருமூச்சுவிடுவது போலாகும்” என்கிறார். மேலும் “இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிரே ஓர் நொடிநொடிப்பது போலும்” என்றும் குறிப்பிடுவார். இவ்வாறான இலக்கிய ஒப்பீடுகளைக் கூறியபோது கேட்டவர் உமறுவின் தமிழ்ப் புலமையை உணர்ந்து இன்புற்றனர்.
அரபு, பார்சிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களுடன் இணைத்துப் பாடும்போது உமறுப்புலவர் காட்டுகின்ற நயங்களைச் சுட்டிக்காட்டியபோது அவையில் மகிழாதார் எவரும் இலர். ‘ஈமான்’ எனும் அரபுச் சொல்லுக்கு “நம்பிக்கை” என்பது பொருள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் மீது ஈமான் கொண்டவரே இஸ்லாமியராக முடியும். சீறாப் புராணத்தில் ஒரு நிகழ்ச்சி. புலி துரத்தியதால் மான் கூட்டம் சிதறி ஓடியதில் ஆண் மானையும் அண்மையில் பிறந்த கன்றினையும் பிருந்து வந்த பெண் மானை வேடன் ஒருவன் பிடித்துத் தனக்கு நல்ல உணவாகும் எனக் கட்டிப்போட்டிருந்தான்.
அவ்வழியே வந்த நபிகள் நாயகத்திடம், “”என்னை விட்டால் ஓடிப்போய் என் குட்டிக்குப் பால் கொடுத்துத் திரும்பி வந்து விடுவேன்” என மான் வேண்டியது. நாயகமவர்கள் வேடனிடம் இதைக் கூறி அம் மானை விடுவிக்குமாறு கேட்டார். “”ஓடிப் பிழைக்கும் மான் ஒருபோதும் திரும்பாது” என்றான் வேடன். “”மான் வராவிட்டால் ஒன்றுக்கு இரண்டாக நான் தருவேன்” என நாயகம் பிணை நின்றதும் வேடன் மானை விடுவித்தான். மான் வேகமாக ஓடி, கன்றுக்குப் பால் கொடுத்தது; வேடனிடம் செல்லத் திரும்பியது; அதன் ஆண் மானும் மற்ற மான்களும் தடுத்தும் கேட்கவில்லை; தாய் மான் எவ்வளவு சொல்லியும் கேளாது கன்றும், அதனுடனேயே வந்தது. மான் ஒன்றுக்கு இரண்டாக வருவதைக் கண்ட வேடன் மனந்திருந்தி, மானை விட்டதோடு இஸ்லாத்திலும் சேர்ந்தான்.
இந் நிகழ்ச்சியைக் கூறும் உமறுப் புலவர்,
மானைக் கொண்டுவரப் போய்
ஈமானைக் கொண்டு அகத்திற் புக்கான்
என்று பாடுகிறார்.
‘மான் – ஈமான்’ இரண்டையும் இணைத்து உமறுப்புலவர் பாடியிருக்கும் நயத்தை விளக்கியபோது அவையினருன் உவகைக்கு அளவேயில்லை. உமறுப் புலவரின் தமிழ்ப் புலமை, முந்தைய காப்பியங்களின் முறைநின்று எமுதியுள்ள தன்மை, இஸ்லாமிய நெறிமுறைகளைச் சரியாக எடுத்துரைத்துள்ள திறமை ஆகிய இவற்றை ஓர் இலக்கிய மாணவன் எனும் நிலையில் நின்று சீறாப்புராணப் பொழிவுகளை ஆற்றினேன். இஸ்லாமிய இலக்கியங்களில் மற்றும் கொள்கைகளில் விளக்கம் வேண்டுமெனில், சென்று கேட்கத் தகுந்தவர்கள் எனும் பட்டியலில் என்னையும் ஒருவனாக ஆக்கியுள்ளது சீறாப்புராணம்.
சீறாப்புராணத்தை அடுத்து, சுலைமான் நபி அவர்களுடைய வரலாற்றினைக் கூறும் “”இராஜ நாயகம்” எனும் காப்பியத்தையும் தொடர் சொற்பொழிவு ஆற்றியுள்ளேன்.
சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நீதியரசர் மாண்புமிகு மு.மு. இஸ்மாயீல் என்னிடம், “”இஸ்லாமியர்களிடையே அச் சமயம் பற்றி அவர்கள் மனங்கோணாமல் 25 கூட்டங்கள் எப்படி உன்னால் பேச முடிந்தது?” என்று வியந்து கேட்டார். அந்நிறைவு விழாவில் அவர்கள் வாயிலாக, “சீறாச் செல்வர்” எனும் சிறப்புப் பெயர் எனக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் இஸ்லாமியக் காப்பியங்கள் இரண்டினைத் தொடர் சொற்பொழிவாக ஆற்றிய வாய்ப்பு இதுவரை என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்.
நன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்

உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
…..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்
நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
…..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
…..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
…..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்
படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
…..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
…..எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
…..கருணையில்லார் மட்டுமே கடையராவார்
உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
…..உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்
கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
….. கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
…..பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
…..கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
…..பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்
நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
…..நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
…..ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
…..பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
…..அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை
கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
…..கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
…..நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
…..வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
…..அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்
எழுதியது நெல்லை கண்ணன்
நபி பெருமான் சொன்ன பதில்
இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
…..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
…..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
…..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
…..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்
எழுதியது நெல்லை கண்ணன்
(வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் நான் ஒரு முயற்சி செய்தேன். எங்கள் அலுவலகத்தில் இருக்கிற பரக்கத் அலி மூலமாக, ஒரு முஸ்லிம் அறிஞரிடம் இஸ்லாம் மதம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமாக எழுதித் தருமாறு, பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்டேன். அதை பரக்கத் அலி கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அது கொஞ்சம் கடினமாக இருப்பதால், அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் திரும்பவும் பேசி, எளிமைப் படுத்தி அதை பிரசுரிக்கத்தான் செய்வேன். ‘இஸ்லாமைப் புரிந்துக் கொள்வோம்’ என்ற அடிப்படையில் அந்தக் கட்டுரை வெளியிடப்படும்.
- சோ, துக்ளக் (02.02.2005) இதழில்

ஒட்டகங்கள்
தேசத்தில் பிறந்தார்.
ஒட்டாத அகங்களை எல்லாம்
ஒட்டி வைத்தார்.
அவரைப் பற்றி
எழுதும் இரவுகளில்
விளக்குகள்
ஏற்ற வேண்டியதில்லை
எழுத்துக்களிலேயே
பளிச்சென்று வெளிச்சம்!
(சென்னைத் தொலைக்காட்சியில் வழங்கிய மீலாத் கவியரங்கில்)

இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். எனத் தொடரும் அவரது பேச்சில்
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை தென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]
மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்
இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.
சுவாமி விவேகானந்தர் – [Letters of Swami Vivekananda P.463]

வில்லியம் மூர்
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர்

கார்லைல்
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
- தாமஸ் கார்லைல் -

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
- கிப்பன் -

டால்ஸ்டாய்
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் நேரு -

நெப்போலியன்
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
- நெப்போலியன் -

பெர்னார்ட் ஷா
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -

கவிக்குயில்
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.
எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.
உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.
மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
- கவியரசி சரோஜினி நாயுடு -

அறிஞர் அண்ணா
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

காந்திஜி
இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.

ப.சிதம்பரம்
அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனிதர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த பலம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார். தம்முடைய ‘யங் இந்தியா’ பத்திரிகைகளில் முகம்மது நபியின் உயர் பண்புகளைக் குறித்து மகாத்மா காந்தி எழுதியதைப் பாருங்கள்.
இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஒர் இடத்தைப் பெற்றுத் தந்ததுவாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின்மாறாத எளிமை,தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை,தம் தோழர்கள் மீது அவர்கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு,அவரது அஞ்சாமை,இறைவன் மீதும் தமது பிரசாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்.
இஸ்லாம் ஒரு போராளிகளின் மதம் என்றொரு தோற்றம் இருக்கிறது. வாள் பலம் கொண்டேஇஸ்லாம் பரவியது என்றும் வாள் பலத்தைக் கொண்டு இஸ்லாமியர் மற்றவர்களை அச்சுறுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இஸ்லாமிய இயக்கம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகே முன்னேறியது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
அண்ணல் நபிகள் நாயகம் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டதை நபித்துவம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. நபிகள் நாயகத்தின் பணியை இஸ்லாம் அழைப்புப் பணி என குறிப்பிடுகிறது. இந்த அழைப்புப் பணியை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் காலகட்டம் மக்கா நகரில் நடந்த சகாப்தம். இது 13 ஆண்டுகள் நீடித்தது. இரண்டாவது கால கட்டம் மதனீ சகாப்தம். இது 10 ஆண்டுகள் நீடித்தது. மக்கீ சகாப்தத்தில் நபிகள் நாயகத்தின் மீதும் அவருடைய அழைப்புப் பணியின் மீதும் சொல்லொணாத கொடுமைகளும், அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அன்றைய அதிகாரவர்க்கத்தினர் நபிகள் நாயகத்தை பைத்தியக்காரர் என்று பழித்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்கயாரும் போகக் கூடாது என்று தடை விதித்தார்கள். முஸ்லிம்களைக் கண்ட போது அவர்களைத் திட்டினார்கள். வசை பாடினார்கள். ஆயினும் இஸ்லாமிய அழைப்பின்பால் மக்கள் கவனம் திரும்பிஏராளமானவர்கள் திரண்டார்கள். தன்னுடைய இறுதி ஆயுதமாக வன்முறையை அதிகாரவர்க்கம் ஏவி விட்டது. முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட துன்பங்கள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு,மக்கா நகரிலிருந்து வெளியேறுவது என்று நபிகள் நாயகம் முடிவெடுத்தார்.
மக்கீ சகாப்தம் ஒரு பெரும் போராட்ட காலமாக இருந்தது.பிறகுதொடங்கியதே மதனீ சகாப்தம். தம்மையும் தம்முடைய மதத்தையும் தற்காத்துக் கொள்ளவே முஸ்லிம்கள் போராட்டக் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் காழ்ப்பு உணர்வுகளின் காரணமாகவே இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் நடந்தது என்பதே உண்மை.
பேராசிரியர் பெவான் என்னும் வரலாற்று நூலாசிரியர், முகம்மதைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவையெல்லாம் இலக்கிய விந்தைகளாகி விட்டன என்று குறிப்பிடுகிறார். இஸ்லாம் ஏகத்துவம், மறுமை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ஒரே இறைவன் என்பது மூலக்கோட்பாடு. அவனை ஒத்ததோ, விஞ்சியதோ ஏதுமில்லை. அவன் அதிபதி. அவனிடம் எந்த குற்றமும், குறையும் காண முடியாது.
அவன் உடல்களை உருவாக்கியவன். ஆன்மாவை உண்டாக்கியவன். அவனே இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி. இதுவே ஏகத்துவம். உங்களுள் மறைந்திருப்பவையும், இந்த உலகில் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவையும் மறுஉலகில் உங்கள் முன் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பது மூலக்கோட்பாடு. இதுவே மறுமை. இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் என்ன குற்றத்தைக் காண முடியும்? எல்லா மதங்களிலும் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைப்பவர்கள் இருக்கிறார்கள். காலப்போக்கில் பல மூட நம்பிக்கைகளும் மலிந்து விடுகின்றன.
மதம் என்பது ஒரு போர் வாளாக மாறிவிடுகிறது. இந்து சமயத்திலும், கிறிஸ்துவ சமயத்திலும், யூத சமயத்திலும் தீவிரவாதிகள் இருப்பதைப்போல் இஸ்லாத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்த தீவிரவாதிகளினால்தான் மதங்களிடையேபகை வளர்கிறது. இந்தத் தீவிரவாதிகளின் சொல்லையும் செயலையும் கொண்டு ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது.
திருக்குர் ஆனைப் படிப்பதற்கும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் ஓதப்பட்ட காலம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட மாறாமல் எந்த இடைச் செருகல்களுக்கும் உள்ளாகாமல் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருக்குர்ஆன் மட்டுமே என்று சர் வில்லியம் மூர் குறிப்பிடுகிறார்.
திருக்குர் ஆனை ஏற்று நபிகள் நாயகத்தை இறைத்தூதராகப் போற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களின் சகோதரர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும் என்று விழைகிறேன்.
( குடவாசல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட அருள் வசந்தம் எனும் மலரிலிருந்து )
தகவல் : இனியவன் ஹாஜி முஹம்மது

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.
1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.
பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.
ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை – ஆறு ஆண்டுகள் – அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.
ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.
பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.
அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.
“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;
எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”
இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.
கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.
“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !
அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”
பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,
பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.
“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.
பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.
“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்” – என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்
“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்” – என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.
தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் -
என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :
“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!
எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.
“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”
என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.
தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.
தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.
பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:
ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !
அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

பிறைப் பள்ளி முதல் அணிவகுப்பு
ரதியும் இஸ்லாமும்
தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…
“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். ‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’
‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)
நன்றி: திரு.ரவிபிரகாஷ்
பேரரசிரியர் மு. சாயபு மரைக்காயர்
“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.
“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”
அப்பாஸ் இப்ராஹீம்
“இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை”
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI
கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு
திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.
ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”
ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.
கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.
அரபி மூலம் – தமிழாக்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.
மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.
இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;
வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!
ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!
ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.
திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.
திறப்பு
எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.
* * *
உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;
அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;
உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;
நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!
எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”
- கண்ணதாசன்
எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.
கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்
சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.
திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.
“சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!”
(”கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 146)
கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.
“புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”
(”கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)
நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.
“நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்” என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,
“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;
எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”
என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!
கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
“மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!”
என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,
“எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!”
என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,
“எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!”
என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.
கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.
“எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!”
என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.
பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக…, கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.
நிறைவுரை
இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.
நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், “அல்ஃபாத்திஹா” எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் “திறப்பு” என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்
(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)
நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006
——————————————————————————–
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக் கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. எனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டளையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
- அறிஞர் அண்ணா -
நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
by Anwar H Chowdhury
For one who was an arch atheist, with a communist activist for a father, who could not accept Islam, knowing that it ‘required one to be strictly disciplined’, Abdullah Adiyar, the celebrated South Indian poet, playwright, orator and journalist of the Tamil-speaking world had come a long way when he breathed his last on 19 September. After almost a lifetime of achievements which would be the envy of most people, Adiyar made a name for himself throughout India, and across the seas, as a fervent champion of Islam, even before he himself had become a Muslim.
Abdullah Adiyar’s commitment to promoting Islam, ‘the religion of salvation’, was as strong as his belief that it is Allah alone who gives hidaya (guidance) to people, and it is not for him ‘to convert.’ He ran the Islamic Dawah Centre in Madras and was engaged in an Islamic project for satellite television for the 60 million strong Tamil viewers. He was a popular speaker on Islam not only in the towns and cities of Tamil Nadu but also abroad; he was invited to speak on the life of the Prophet by the Tamil Muslims of Britain. He also visited Sri Lanka and Singapore which have a large Tamil speaking population. He produced audio as well as video cassettes to teach Islam .
His devotion to da’wah remained undiminished despite a stroke last year; he could not speak or write much, but he was present at most Islamic gatherings, and never lost contact with Islamic da’wah work. His funeral prayer on Friday, 20 September, 1996 at Jami’ Masjid in Kodambakim and burial followed by a memorial gathering bore testimony to the niche he had found among Muslims and non-Muslims alike.
Already an author of 120 novels, 13 plays and 13 books, editor of the daily Murasoli, (for 17 years) mouthpiece of Dravidian Munnetra Kazagham, the Tamil regional nationalist party, Adiyar had his introduction to Islam during the darkest days of his life, thanks to his wife Thayammal, a Christian then.
The state of emergency declared by prime minister Mrs Indira Gandhi in 1975 was a nightmare for politicians and opinion makers throughout India; under the Maintenance of Internal Security Act, DMK workers in Tamil Nadu were flung into prison, Adiyar included. He was imprisoned and tortured, with lasting injuries to his stomach. In the bowels of despair and pain, the spark of Islam touched his soul. His wife’s Bible, to quote his words, “did not provide me the answer. The atheist in me was looking for answers to questions like ‘Why death? What is the reason for creation?’” But it spurred him to search for answers for his tortured soul which he eventually found in his study of the life of Prophet Muhammad, and the Qur’an. He read Yusuf Ali’s English translation, making notes which inspired him to write a series of 17 articles entitled: Nan Kadilikkum Islam (The Islam I love), also published in a book under the same title, Nan Kadilikkum Islam.
On his release in 1977 he started a journal Neerottam, in which he published his reflections on Islam. Without any patronage, the magazine did not last long, but the publication of those articles in a book Nan Kadilikkum Islam proved an instant success. The second edition was also snapped up. Translations quickly followed in many languages such as Malayalam, Telagu, Marathi, Hindi and Urdu.
The Urdu edition of The Islam I love led to a Sindhi edition in Pakistan in 1983, thanks to the late President Ziaul Haque. Idarai Majlise Adab, the publishers, invited Adiyar to Pakistan. He attended the Shah Abdul-Latif Bhittai Conference in Sukkur, where Ziaul Haque welcomed him as the guest of honour at the launching of the Sindhi edition by Sindhi Adab Melo. Adiyar visited Lahore and Karachi and was treated with such respect that he fondly recalled: `I was honoured as if I was the minister of a foreign state.’
Another magazine, Tangagurodun, was no more successful, but his publishing house, Neerottam Publications, he did not abandon. He published 12 books on Islam, some in refutation of critics; some of the titles were From prison to the Mosque, One God or many?, Islam Calls.
The one publication that had an indelible impression on so many was The Islam I love. Its impact on one reader, a zamindar (landowning aristocrat) in faraway Uttar Pradesh, was like a ricocheting bullet that first got the man in northern India than the unaware author in the south. His burning desire to meet Adiyar brought him to Madras
in 1987 to proclaim: “I accepted Islam after reading your book.” He was aghast when he saw, as the author himself admitted, “found me sunk in my chair with cigarette pressed between the fingers and an open whisky bottle On the table.”
The Zamindar’s bursting out in tears at the sight of him touched Adiyar’s conscience. After a sleepless night and reflection, he realised he had found God’s guidance. “Islam’s strict discipline” dissuaded him no longer. On 6 June 1987, Adiyar went straight to Ma’mur Mosque in Madras, and accepted Islam, taking the name Abd’Allah, the slave of Allah. His short story, Wife and My Peacock, won him in 1982 the Tamil Nadu state government’s award, ‘Kalaimammani’, but no work of his could have been dearer to him than the Nan Kadilikkum Islam which brought him the vista of Islam.
Adiyar was questioned by Indian intelligence officials about his efforts to invite people to Islam. He told them it was Islam itself attracted them. “No force on earth can stop conversions in the state of Tamil Nadu. No political pressure including the BJP [extremist Hinduist party] can stem the tide.”
Born on 16 May 1935 in the industrial city of Tiruppur, Tamil Nadu, Adiyar received his early education there. During his higher education in Koyamber (Coimbatore), he developed a flair for speaking and writing. Much impressed with Vinobe Bhave’s land for the landless movement, Adiyar made his journalistic debut in the famous Tamil poet Kanna Dasan’s magazine Tezli (Spring). Soon he came in contact with the Dravidian movement in South India which pulled him into the DMK. Impressed by him, the former chief minister, the late C N Annadurai, and the present chief minister who was close to him, appointed Adiyar editor of Murasoli.
Among those who have been influenced by Adiyar to follow Islam are a former district secretary of the Communist Party of India, Kodikkal Chellappa, now Kodikal Sheikh Abdullah; Dr B R Ambedkar’s colleague Veerabhadranam, now Muhammad Bilal; a Buddhist monk, Swami Ananda Bhikhu, now Muhammad Mujeebullah. Others have been inspired to write books on Islam.
Abdullah Adiyar is survived by his father Vankatachillam, wife and two sons -who are Muslim -and one daughter, and two brothers.
Courtesy: Impact International, London. Muslimedia – March 1-15, 1997
by Dr. Zakir Naik I INTRODUCTION TO HINDUISM: The most popular among the Aryan religions is Hinduism. 'Hindu' is actually a Persian word that stands for the inhabitants of the region beyond the Indus Valley . However, in common parlance, Hinduism is a blanket term for an assortment of religious beliefs, most of which are based on the Vedas, the Upanishads and the Bhagavad Gita. II INTRODUCTION TO HINDU SCRIPTURES. There are several sacred scriptures of the Hindus. Among these are the Vedas, Upanishads and the Puranas. 1. VEDAS: 1. The word Veda is derived from vid which means to know, knowledge par excellence or sacred wisdom. There are four principal divisions of the Vedas (although according to their number, they amount to 1131 out of which about a dozen are available). According to Maha Bhashya of Patanjali, there are 21 branches of Rigveda, 9 types of Atharvaveda, 101 branches of Yajurveda and 1000 of Samveda). 2. The Rigveda, the Yajurveda and the Samveda are considered to be more ancient books and are known as Trai Viddya or the 'Triple Sciences'. The Rigveda is the oldest and has been compiled in three long and different periods of time. The 4th Veda is the Atharvaveda, which is of a later date. iii. There is no unanimous opinion regarding the date of compilation or revelation of the four Vedas. According to Swami Dayanand, founder of the Arya Samaj, the Vedas were revealed 1310 million years ago. According to other scholars, they are not more than 4000 years old. iv. Similarly, there are differing opinions regarding the places where these books were compiled and the Rishis to whom these Scriptures were given. Inspite of these differences, the Vedas are considered to be the most authentic of the Hindu Scriptures and the real foundations of the Hindu Dharma. 2 UPANISHADS: i. The word 'Upanishad' is derived from Upa meaning near, Ni which means down and Shad means to sit. Therefore 'Upanishad' means sitting down near. Groups of pupils sit near the teacher to learn from him the secret doctrines. According to Samkara, 'Upanishad' is derived from the root word Sad which means 'to loosen', 'to reach' or 'to destroy', with Upa and ni as prefix; therefore 'Upanishad' means Brahma-Knowledge by which ignorance is loosened or destroyed. ii. The number of Upanishads exceeds 200 though the Indian tradition puts it at 108. There are 10 principal Upanishads. However, some consider them to be more than 10, while others 18. iii. The Vedanta meant originally the Upanishads, though the word is now used for the system of philosophy based on the Upanishad. Literally, Vedanta means the end of the Veda, Vedasua-antah, and the conclusion as well as the goal of Vedas. The Upanishads are the concluding portion of the Vedas and chronologically they come at the end of the Vedic period. iv. Some Pundits consider the Upanishads to be more superior to the Vedas. 3. PURANAS: Next in order of authenticity are the Puranas which are the most widely read scriptures. It is believed that the Puranas contain the history of the creation of the universe, history of the early Aryan tribes, life stories of the divines and deities of the Hindus. It is also believed that the Puranas are revealed books like the Vedas, which were revealed simultaneously with the Vedas or sometime close to it. Maharishi Vyasa has divided the Puranas into 18 voluminous parts. He also arranged the Vedas under various heads. Chief among the Puranas is a book known as Bhavishya Purana. It is called so because it is believed to give an account of future events. The Hindus consider it to be the word of God. Maharishi yasa is considered to be just the compiler of the book. 4. ITIHAAS: The two epics of Hinduism are the Ramayana and the Mahabharata. A. Ramayana: According to Ramanuja, the great scholar of Ramayana, there are more than 300 different types of Ramayana: Tulsidas Ramayana, Kumbha Ramayana. Though the outline of Ramayana is same, the details and contents differ. Valmiki's Ramayana: Unlike the Mahabharata, the Ramayana appears to be the work of one person – the sage Valmiki, who probably composed it in the 3rd century BC. Its best-known recension (by Tulsi Das, 1532-1623) consists of 24,000 rhymed couplets of 16-syllable lines organised into 7 books. The poem incorporates many ancient legends and draws on the sacred books of the Vedas. It describes the efforts of Kosala's heir, Rama, to regain his throne and rescue his wife, Sita, from the demon King of Lanka. Valmiki's Ramayana is a Hindu epic tradition whose earliest literary version is a Sanskrit poem attributed to the sage Valmiki. Its principal characters are said to present ideal models of personal, familial, and social behavior and hence are considered to exemplify Dharma, the principle of moral order. B. Mahabharata: The nucleus of the Mahabharata is the war of eighteen days fought between the Kauravas, the hundred sons of Dhritarashtra and Pandavas, the five sons of Pandu. The epic entails all the circumstances leading upto the war. Involved in this Kurukshetra battle were almost all the kings of India joining either of the two parties. The result of this war was the total annihilation of Kauravas and their party. Yudhishthira, the head of the Pandavas, became the sovereign monarch of Hastinapura. His victory is supposed to symbolise the victory of good over evil. But with the progress of years, new matters and episodes relating to the various aspects of human life, social, economic, political, moral and religious as also fragments of other heroic legends came to be added to the aforesaid nucleus and this phenomenon continued for centuries until it acquired the present shape. The Mahabharata represents a whole literature rather than one single and unified work, and contains many multifarious things. C. Bhagavad Gita: Bhagavad Gita is a part of Mahabharata. It is the advice given by Krishna to Arjun on the battlefield of Kurukshetra. It contains the essence of the Vedas and is the most popular of all the Hindu Scriptures. It contains 18 chapters. The Bhagavad Gita is one of the most widely read and revered of the works sacred to the Hindus. It is their chief devotional book, and has been for centuries the principal source of religious inspiration for many thousands of Hindus. The Gita is a dramatic poem, which forms a small part of the larger epic, the Mahabharata. It is included in the sixth book (Bhismaparvan) of the Mahabaharata and documents one tiny event in a huge epic tale. The Bhagavad Gita tells a story of a moral crisis faced by Arjuna, which is solved through the interaction between Arjuna, a Pandava warrior hesitating before battle, and Krishna , his charioteer and teacher. The Bhagavad Gita relates a brief incident in the main story of a rivalry and eventually a war between two branches of a royal family. In that brief incident - a pause on the battlefield just as the battle is about to begin - Krishna , one chief on one side (also believed to be the Lord incarnate), is presented as responding to the doubts of Arjuna. The poem is the dialogue through which Arjuna's doubts were resolved by Krishna 's teachings. CONCEPT OF GOD IN HINDUISM by Dr. Zakir Naik 1. Common Concept of God in Hinduism: Hinduism is commonly perceived as a polytheistic religion. Indeed, most Hindus would attest to this, by professing belief in multiple Gods. While some Hindus believe in the existence of three gods, some believe in thousands of gods, and some others in thirty three crore i.e. 330 million Gods. However, learned Hindus, who are well versed in their scriptures, insist that a Hindu should believe in and worship only one God. The major difference between the Hindu and the Muslim perception of God is the common Hindus' belief in the philosophy of Pantheism. Pantheism considers everything, living and non-living, to be Divine and Sacred. The common Hindu, therefore, considers everything as God. He considers the trees as God, the sun as God, the moon as God, the monkey as God, the snake as God and even human beings as manifestations of God! Islam, on the contrary, exhorts man to consider himself and his surroundings as examples of Divine Creation rather than as divinity itself. Muslims therefore believe that everything is God's i.e. the word 'God' with an apostrophe 's'. In other words the Muslims believe that everything belongs to God. The trees belong to God, the sun belongs to God, the moon belongs to God, the monkey belongs to God, the snake belongs to God, the human beings belong to God and everything in this universe belongs to God. Thus the major difference between the Hindu and the Muslim beliefs is the difference of the apostrophe 's'. The Hindu says everything is God. The Muslim says everything is God's. 2. Concept of God according to Hindu Scriptures: We can gain a better understanding of the concept of God in Hinduism by analysing Hindu scriptures. BHAGAVAD GITA The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita. Consider the following verse from the Gita: "Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures." [Bhagavad Gita 7:20] The Gita states that people who are materialistic worship demigods i.e. 'gods' besides the True God. UPANISHADS: The Upanishads are considered sacred scriptures by the Hindus. The following verses from the Upanishads refer to the Concept of God: i. "Ekam evadvitiyam" "He is One only without a second." [Chandogya Upanishad 6:2:1]1 ii. "Na casya kascij janita na cadhipah." "Of Him there are neither parents nor lord." [Svetasvatara Upanishad 6:9]2 iii. "Na tasya pratima asti " "There is no likeness of Him." [Svetasvatara Upanishad 4:19]3 iv. The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form: "Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam." "His form is not to be seen; no one sees Him with the eye." [Svetasvatara Upanishad 4:20]4 1[The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448] [Sacred Books of the East, volume 1 'The Upanishads part I' page 93] 2[The Principal Upanishad by S. Radhakrishnan page 745] [Sacred Books of the East, volume 15, 'The Upanishads part II' page 263.] 3[The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737] [Sacred Books of the East, volume 15, 'The Upanishads part II' page no 253] 4[The Principal Upanishad by S. Radhakrishnan page 737] [Sacred Books of the East, volume 15, 'The Upanishads part II' page no 253] THE VEDAS Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda. 1. Yajurveda The following verses from the Yajurveda echo a similar concept of God: i. "na tasya pratima asti "There is no image of Him." [Yajurveda 32:3]5 ii. "shudhama poapvidham" "He is bodyless and pure." [Yajurveda 40:8]6 iii. "Andhatama pravishanti ye asambhuti mupaste" "They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink deeper in darkness, those who worship sambhuti." [Yajurveda 40:9]7 Sambhuti means created things, for example table, chair, idol, etc. iv. The Yajurveda contains the following prayer: "Lead us to the good path and remove the sin that makes us stray and wander." [Yajurveda 40:16]8 5[Yajurveda by Devi Chand M.A. page 377] 6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538] 7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538] 8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541] 2. Atharvaveda The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3: 1. "Dev maha osi" "God is verily great" [Atharvaveda 20:58:3]9 3. Rigveda i. The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus. The Rigveda states in Book 1, hymn 164 and verse 46: "Sages (learned Priests) call one God by many names." [Rigveda 1:164:46] ii. The Rigveda gives several different attributes to Almighty God. Many of these are mentioned in Rigveda Book 2 hymn 1. Among the various attributes of God, one of the beautiful attributes mentioned in the Rigveda Book II hymn 1 verse 3, is Brahma. Brahma means 'The Creator'. Translated into Arabic it means Khaaliq. Muslims can have no objection if Almighty God is referred to as Khaaliq or 'Creator' or Brahma. However if it is said that Brahma is Almighty God who has four heads with each head having a crown, Muslims take strong exception to it. Describing Almighty God in anthropomorphic terms also goes against the following verse of Yajurveda: "Na tasya Pratima asti " "There is no image of Him." [Yajurveda 32:3] Another beautiful attribute of God mentioned in the Rigveda Book II hymn 1 verse 3 is Vishnu. Vishnu means 'The Sustainer'. Translated into Arabic it means Rabb. Again, Muslims can have no objection if Almighty God is referred to as Rabb or 'Sustainer' or Vishnu. But the popular image of 9[Atharveda Samhita vol 2 William Dwight Whitney page 910] Vishnu among Hindus, is that of a God who has four arms, with one of the right arms holding the Chakra, i.e. a discus and one of the left arms holding a 'conch shell', or riding a bird or reclining on a snake couch. Muslims can never accept any image of God. As mentioned earlier this also goes against Svetasvatara Upanishad Chapter 4 verse 19. "Na tasya pratima asti " "There is no likeness of Him" The following verse from the Rigveda Book 8, hymn 1, verse 1 refer to the Unity and Glory of the Supreme Being: iii. "Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata" "O friends, do not worship anybody but Him, the Divine One. Praise Him alone." [Rigveda 8:1:1]10 iv. "Devasya samituk parishtutih" "Verily, great is the glory of the Divine Creator." [Rigveda 5:1:81]11 Brahma Sutra of Hinduism: The Brahma Sutra of Hinduism is: "Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan" "There is only one God, not the second; not at all, not at all, not in the least bit." Thus only a complete study of the Hindu scriptures can help one understand the concept of God in Hinduism.

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை
தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதகோல் செய்த
‘சஜ்தாவின்’* சுவடுகள்
உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்
நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் ‘ஈமான்’ பின்னால்
ஏகும் ரகுமான்
இதுவரை ஓட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையைப் புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் ழந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழுகம் ஒரு வலைதான்-அதனால்தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே
உலகத்தைப் பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்
இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு
அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்திதான்
அவனுடைய இரை நாம்தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் இரை
எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் எந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்
அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது
உணவு,உடை,உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நு�லாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது
இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா ?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நு�ல் நு�ற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை
எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தெளர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி
‘தெளர்’ குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்
‘தெளர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ
சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்
உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலைதான்
மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஓரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்காகல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்கு வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்
அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ ஊலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முகத்திரை போட்டாயோ
நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு*
கபன்* நெய்யத் தொடங்கினாய்
இறைவன் தந்த நு�ல் மறை-நு�ல்
உன் நு�லோ மறை கொணர்ந்த
து�தரை மறைத்த நு�ல்
அன்று உன் மறை நு�லால்
இறைவனின் மறை நு�லையே
காப்பாற்றிவிட்டாய்.
இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையைக் கட்டிவிட்டது
இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஓரு நு�லாம் படையால்
தடுத்து நிறுத்தி விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
மனித மூளையின்
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்ற காப்பாற்றப்பட்டது.
இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது
என் இதயமும் ஒரு தெளர் குகைதான்
எங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா ?
இந்த மினிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
இன் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா
புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு
கவிக்கோ
* ஸஜ்தா – நெற்றி தரையில்பட தொழுவது
* குபுரியம் – ஏகத்துவத்திற்கு எதிரானது
* கபன் – அடக்கம் செய்யும்போது உடுத்தும் வெண்ணிற ஆடை
கொடுக்கல்
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும
- அப்துல் ரகுமான்
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)
ஆன்மாவின் விபச்சாரம்
உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்.
FATWA
Saudi council of Muftis have given an unanimous Fatwa that ring tones on QURAN AAYAS are haraam because the AAYAT are not complete when we pick the phone & meanings of AAYA/S changes when they are not complete. QURAN E PAK is for Hidayat not for ring tones.
அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்
– நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.
அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.
– ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.
இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது.
– சிஎன்என், டிசம்பர் 15, 1995.
அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவந்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.
– ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.
இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள்.
– சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.
– டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
மனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.-
- ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.
வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
– W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.
இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி :
இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.
– என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.
இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.
– லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.
– ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
– மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.
அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.
போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
– பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது.
– அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.
கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.
– மகாத்மா காந்தி, ’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
– வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.
ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.
– தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840.
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் நேரு -
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் -
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
- டாக்டர் ஜான்சன் -
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
- நெப்போலியன் -
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர் -
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
- காந்திஜி -
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
- தாமஸ் கார்லைல் -
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
- கிப்பன்
__________________________________________________________
ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:
குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது’ என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10
இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.
-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167
சுவாமி விவேகானந்தர்
மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன். நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் – அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.
Letters Of Swamy Vivekananda page 463
சர் சி.பி.ராமசாமி அய்யர்
இஸ்லாம் என்றால் என்ன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் – அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.
Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944
மகாத்மா காந்தி
தென் ஆப்ரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.
Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8
அன்னி பெசன்ட் அம்மையார்
அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.
Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4
லாமார்டின்
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்துதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் அவர்கள்.
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.
எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.
உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.
மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
- கவிக்குயில் சரோஜினி நாயுடு -

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.
சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.
மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.
இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.
வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.
இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.
தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.
தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.
தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.
தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.
நன்றி : தினமணி.



ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசய நீராகிய ஜம்ஜம்மின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ‘ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல” என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.
கஃபத்துல்லா, தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் - இதனன விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார்.அமைச்சரவை ஜித்தாவில் உள்ள “மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்” – இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் - நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு… கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு… இபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!
நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன். அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நின்றபடியே சென்றார் – காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதிக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து நீர் வரும் வழியைக் காணலாமே என்று! “ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான” பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் ‘அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.” பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலைமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.
நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது – மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.
இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜம் நீரை ஆராய - ஆராய மேலும் பல அதிசய தன்மைகள் வெளிவந்து - நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.
சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்.
இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக – அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
அதன் ‘குடிக்கத்தக்க தன்மை” ஒவ்வொரு ஆண்டும் உம்ரா – ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal)..
பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் – மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க – நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.
The Well of Zamzam (or the Zamzam Well, or just Zamzam; Arabic: ) is a well located within the Masjid al Haram in Mecca, 20 metres east of the Kaaba,[1] the holiest place in Islam. According to Islamic tradition it was a miraculously- generated source of water from angel Jibril (Gabriel), which began thousands of years ago when Ibraham’s infant son was thirsty. Millions of pilgrims visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order to drink its water. By Saudi law, the water cannot be sold outside of the kingdom, but because of strong demand there is a thriving market in fake Zamzam water in other countries.
Zam Zam is 18X14 ft & 18 meter deep water well.
It started 4000 yrs ago.
Never dried since then.
Never changed the taste, no Algea or plant growth in the pond, thus no disease caused.
It was tested by European Laboratories & declared fit for drinking.
This small pond provides water to millions of people through heavy motors pulling 8000 lit: per second and after 24 hours in only 11 mins completes its level. Thus its water level never decreases
Subhanallah !!!
இறைவன்
பிரசுரிக்கும்
இணையில்லா
பத்திரிக்கை
இந்த பூக்கள்.
வெல்வெட்
இதழ்கள்;
வண்ண வண்ண
எழுத்துக்கள்.
அச்சுப்பிழை
இலக்கணப்பிழை
இல்லாத
அழகிய படைப்பு.
காலை பதிப்புமுண்டு
மாலை பதிப்புமுண்டு
விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்ட
பிரதிகள் இவைகள்
எல்லா மொழியினரும்
புரிந்துக் கொள்ளும்
எளிய மொழிநடை
பரமனின்
பத்திரிகையை
பாமரனும் படிக்கையிலே
பரமசுகம்.
சமயச் சார்பற்ற
சஞ்சிகை இது.
தினசரி
வாராந்தரி
மாதாந்தரி
ஆண்டு மலர்
ஏன் ?
அவனது பிரசுரத்தில்
மாமாங்கத்திற்கு
ஒருமுறை
வெளியாகும்
குறிஞ்சி மலரும் உண்டு
ஆபாசமே இல்லாத
ஒரே மஞ்சள் பத்திரிக்கை
இதுவாகத்தானிருக்கும்
மனிதனின் பத்திரிக்கை
படித்தால்தான்
ஆனந்தம்
இறைவனின்
பத்திரிக்கையை
பார்த்தாலே
பரவசம்
சமயக் குறிப்பு
மருத்துவக் குறிப்பு
வீட்டுக் குறிப்பு
அனைத்தும் உண்டு
பொடி வைத்து எழுதிய
புதுக்கவிதையும் உண்டு
ஆம் ..
மகரந்தப் பொடி
வசீகர நடையில்
வசமிழந்துப்போன
வாசக வண்டினங்கள்
வரிவரியாய்
மனனம் செய்வது
ரீங்காரமாய் காதில் விழும்
தாவரவியல்
மாணவர்களின்
குறிப்புதவி ஏடு
இணையத்து
மின்னிதழோ
இந்த சூரிய காந்தி ?
கதிரவனைக் கண்டதும்
பக்கங்கள்
தானாகவே
திறக்கின்றனவே ?
ஊட்டியில்
ஆண்டுதோறும்
திறந்திருக்கும்
நூலகமொன்றில்
நான் படித்த வாசகம்
“பத்திரிக்கைகளை
புரட்டாதீர்கள்”
அப்துல் கையூம்
நன்றி : திண்ணை (29.11.07)
முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.
யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?
நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !
நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !
உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !
பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !
கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !
உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !
உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை
அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.
கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?
நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்
தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல
நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !
உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !
அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?
வருவாயா?
வருவாய்.
– அப்துல் கையூம்
என்னருமை
சட்ட வல்லுனர்களே !
வாழ்நாள் முழுவதும்
ஜாமினில்
வெளிவரவே முடியாத
‘தடா’ சட்டம்
ஏதாவதிருந்தால்
தயவுசெய்து
சொல்லுங்கள்.
கடந்து போன
என்
இளமைக்கால
இனிய நினைவுகளை
இதயச் சிறையில்
இரும்பு விலங்கிட்டு;
ஆசை தீர
அடைத்து வைத்து;
ஆயுள் கைதியாக்கி
அழகு பார்க்க வேண்டும் !
– அப்துல் கையூம்
இது அடுக்குமா..?
வெள்ளையும்
சள்ளையுமாய்
வெளியே
நடமாட்டம்.
சுத்தம்
சட்டையில் மட்டும்
இருந்தென்ன லாபம் ?
சட்டைப்பைக்கு
சமீபத்திலுள்ள
சதைத்துண்டில் அல்லவா
வேண்டும் ?
மேடையில்
அவருக்கு
எடைக்கு எடை
நாணயமாம்.
அவரது
நாணயத்திற்கு
எடைக்கு எடை
தரச் சொன்னால்
ஒரே ஒரு நாணயம்
தேறுவதே சந்தேகம்.
செப்படி வித்தையில்
சொல்லுவான்
வாயிலிருந்து
குருதி கொட்டுமென்று
இவர்களின்
சொல்வித்தையில்
வாய் திறந்தால்
வாக்குறுதிகள் அல்லவா
கொட்டுகிறது ?
ஏப்பம் விடுவது
இவர்களுக்கு
எளிதான கலை.
மேடையில் சோடா ..
மற்றவை தெரிவதில்லை.
இவர்கள்
துண்டு போடுவது
தோளில் மட்டுமா ?
நாட்டையும்தான்
நம்மையும்தான்.
அடுக்கு
இவர்களுக்கு பிடிக்கும்
அடுக்குமொழிகள்
அடுக்கடுக்காய்
பணக்கட்டு
அடுக்குமாடிக்
கட்டிடங்கள்
இது
அடுக்குமா என்று
கேட்காதீர்கள் ..!
– அப்துல் கையூம்
அந்த
கற்கள் பேசுமா?
ஆம். அது
பேசும் கற்கள்
எத்தனைக் கோடி
மனிதர்களிடம்
இதுவரை அது
உறவாடியிருக்கும்?
எண்ணிக்கையில்லை.. ..
எத்தனை எத்தனை
மொழிகளில்
இதுவரை அது
உரையாடியிருக்கும்?
ஏதும் தெரியவில்லை … ..
“என்னைப் பார்
என் அழகைப் பார்” என
எதார்த்தமாய் மொழியும்
ஏதோ ஒரு மொழி
ஒன்று மட்டும்
நிதர்சனம்.
அம்மொழி
செம்மொழி
நம்மொழி போல
காலையில் ஒரு தொனி;
மாலையில் ஒரு தொனி;
முழுநிலவின்போது
மொழியும் அழகே தனி !
அன்று முதல்
இன்று வரை
மாறாத குரல் வளம் !
மாசுக் காற்றில்
குரல் சற்று
குன்றிப் போயிருக்கலாம்
அவ்வளவே..
உயிராயிருந்த
அகலிகை
கல்லானது
புராணம் !
உயிரில்லாத
கற்கள்
உயிரோட்டமானது
வரலாறு !
அது சாபம்
இது வரம் !
வரம் தந்தவன்
ரசனையுள்ள
முனிவன் போலும் !
தாஜ்மகாலே பேசு!
பேசிக் கொண்டே இரு..
– அப்துல் கையூம்
என்ன லிபியோ
யாருக்கும் தெரியாது !
எழுதியிருப்பது என்ன
எதுவுமே புரியவில்லை !
புரியாத மொழியில்
புலப்படாத கிறுக்கல்.
எழுத்தே தென்படாமல்
அது என்ன மையோ..?
எழுதியதை மாற்ற
இயலாத மை அது.
எழுதியதும் அவனே !
அழிப்பதும் அவனே !
பொய்ப்பிக்காத
‘மெய் எழுத்து’ அது.
‘உயிர் எழுத்தும்’ அதுவே.
தலையெழுத்து …
உயிரினங்களுக்கு
மட்டும்தானா?
கான மயிலாட
கண்டிருந்த வான்கோழியாய்
மனிதனும் எழுத
முற்படுகிறான்
மகிழ்வுந்துக்கு
எண் பலகை !
ஊர்களுக்கு
பின்கோடு !
மாவட்டங்களுக்கு
தலைவர்களின் பெயர் !
நேற்று
இவன் வைத்த
என் வீட்டு எண்
பழைய எண் ஆகி
இன்று பரிணாமம்
புதிய எண் !
ஆனால்
ஒரே ஒரு
வித்தியாசம் !
அவனது மாறுவதில்லை;
இவனது மாறி விடுகிறது.
– அப்துல் கையூம்
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறியபிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
“அல்லாஹு அக்பர்” என்ற
அழைப்புச் சப்தம்.
– அப்துல் கையூம்
விரலை ..
நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?
நீட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டிக்கிட்டு தொழுவனுமா ?
ஆட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டம் … ..
முடிஞ்சுபோகும் முன்னாலே
முதலில் சொல்லுங்க
அப்புறம் ..
ஆட்டவே முடியாதபோது
பெரிய தொல்லைங்க.
கேட்டாலும் கேட்டீக ..
கேள்விகளை போட்டீக ..
வீட்டையுமே ரெண்டாக்கி
நாட்டையுமே ரெண்டாக்கி
போட்டியாக எங்களையும்
புறப்படத்தான் வச்சீக ..
இறப்பு ..
எப்ப வரும் ?
எங்கே வரும் ?
ஒண்ணும் தெரியலே !
எப்ப உங்க
விவாதம் தீரும் ?
எதுவும் புரியலே !
நமக்கு தொழுகை
நடக்கும் முன்னே
நாம தொழுவணும்
நாயனுக்கு நன்றியினை
நாளும் கூறணும்
தொழுபவனே
தொழ விடுங்க
அதுவே போதும்
அப்புறமா வச்சிக்குங்க
உங்க
விதண்டாவாதம்.
- அப்துல் கையூம்